Śrīkoṣa
Chapter 1

Verse 1.20

देवासुरविभागोक्तिपूर्विका शास्त्रवश्यता ।
तत्त्वानुष्ठानविज्ञानस्थेम्ने षोडश उच्यते ॥१०॥

Commentaries

Commentary by Maturāntakam Swāmī

தத்த்வ - சித்து, அசித்து, ஈச்வரனாகிய தத்துவ விஷயமாயும் , அநுஷ்ட்டாந - கர்மயோகம் முதலியவற்றைச் செய்வதைப் பற்றியதுமான, விஜ்ஞாந - விசேஷ அறிவானது, ஸ்த்தேம்நே - நிலைநிற்பதற்காக, தேவ-அஸுர-விபாக - தேவாஸுரஸ்வபாவங்களின் பிரிவை, உக்தி - பூர்விகா - சொல்லுவதை முன்னிட்டுள்ள, சாஸ்த்ர-வச்யதா - சாஸ்த்ரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டிய நிலையானது, ஷோடசே உச்யதே - பதினாறாமத்யாயத்திலே சொல்லப்படுகின்றது.
अत्र पूर्वोत्तरसमस्तप्रतिष्ठापकष्षोडशाध्यायार्थस्संगृह्यते । एतदभिप्रायेण भाष्यम् अनन्तरमुक्तस्य कृत्स्नस्यार्थस्य स्थम्ने शास्त्रवश्यतां वक्तुं शास्त्रवश्यतद्विपरीतयोर्दैवासुरसर्गयोः विभाग श्रीभगवानुवाच इति । अत एव सप्तदशमवतारयन्नेवमन्वभाषत-दैवासुरविभागोक्तिमुखेन प्राप्यतत्वज्ञानं तत्प्राप्युपायज्ञानं च वेदैकमूलमित्युक्तम् इति । अत्र शास्त्रवश्यता-तस्माच्छास्त्रं प्रमाणं ने कार्याकार्यव्यवस्थितौ । ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ।। इति अध्यायान्तिमश्लोकेनोका ॥२०॥
இந்தச்லோகத்தில் முன்னும் பின்னுமுள்ள அர்த்தங்களெல்லாவற்றையும் ஸ்த்தாபநம் செய்கின்றதான பதினாறாமத்த்யாயத்தின் பொருள் சுருங்கச் சொல்லப்படுகின்றது. இந்தக் கருத்தைப்பதினாறாமத்யாயாரம்ப பாஷ்யத்தில் காணலாம். அதாவது - ' கீழ் மூன்று அத்யாயங்களில் சித்து, அசித்து, ஈச்வரனாகிய தத்துவங்களைப்பற்றிய விசேஷ நிரூபணம் செய்த பிறகு, முன் சொல்லியவை யாவையும் நிலைபெறுவதற்காகச் சாஸ்த்திர விதிக்குட் பட்டிருக்கவேண்டியதை மேலே சொல்லப்போகிறார். அதற்காகத் தேவ ஸ்ருஷ்ட்டி, அஸுர ஸ்ருஷ்ட்டி இவ்விரண்டும் முறையே சாஸ்த்ரத்திற்கு அடங்கியதும், அடங்காததுமாகும் என்ற வேற்றுமையைப் பகவான் சொன்னார்'' என்பதாகும்.
இந்த அபிப்ராயத்தினாலேயே பதினேழாமத்யாயத்தின் உபோத்காதத்தில், முன்சொல்லியதையே மறுபடியும் பாஷ்யத்தில் சொன்னார். அதாவது - “தைவப்ரக்ருதி ஆஸுரப்ரக்ருதிகளைப் பிரித்துச்சொல்லி, அவ்வழியாலே மோக்ஷத்தை அடையவேண்டிய தத்துவத்தைப்பற்றிய ஜ்ஞாநமும், அதை அடைவதற்கு வேண்டிய உபாயத்தைப் பற்றிய ஜ்ஞாநமும் வேதமொன்றாலேயே பெறலாகும்'' என்று.
ஸங்க்ரஹத்தில் சொல்லிய சாஸ்த்ரவச்யதை என்பது, இவ்வத்யாயத்தின் இறுதி ச்லோகத்தில் சொல்லப்பட்டது. அதாவது - “வேதத்தை விலக்கினால் வேறு வழியில்லாமை யாலே, ஒன்றைப் பின்பற்றுவதற்கும், மற்றொன்றை விலக்குவதற்கும் சாஸ்த்ரமொன்றே ஆதாரமாகும். சாஸ்த்ர விதியில் சொன்னதை அறிந்துக் கர்மாவை நீ அநுஷ்டானம் செய்வாயாக'' என்று அந்த ஶ்லோகத்தின் பொருள். (20)
ஆணை மறாதவர்தேவர் அல்லா வழக்கோரசுரர்
'கோணைமராத குணச்செல்வ! நீ குறிக்கொள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காணிதனால் விசயா!' என்று கண்ணனியம்பினனே. 17
அர்ஜுநா! என்னுடைய ஆணையை மீறாதவர் தைவப்ரகிருதிகளாவர். அப்படியல்லாத ஸ்வபாவத்தை யுடையவர் ஆஸுரப்ரகிருதிகளாவர். ஸ்வாமியை அதிக்ரமியாத குணச்செல்வத்தையுடையவனே! நீ வேதத்தையே ஆதாரமாகக் கொள்வாயாக. கொண்டாடப்படுகின்ற பரம்பொருளும், தீங்கற்றக் கர்மங்களும் இந்த வேதத்தினால் அறிவாய் என்று உபதேசித்தான்.