Chapter 1
Verse 1.21
अशास्त्रमासुरं कृत्स्नं शास्त्रीयं गुणतः पृथक् ।
लक्षणं शास्त्रसिद्धस्य त्रिधा सप्तदशोदितम् ॥२१॥
Commentaries
Commentary by Maturāntakam Swāmī
அசாஸ்த்ரம் - சாஸ்த்ர விருத்தமான, க்ருத்ஸ்நம் - அனைத்தும், ஆஸுரம் - அஸுரர்களுக்குரியதே; சாஸ்த்ரீயம் - சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டதானது, குணத: - ஸாத்த்விகம், ராஜஸம், தாமஸம் என்கிற குணங்களையிட்டு, ப்ருதக் - வெவ்வேறானது. சாஸ்த்ர-ஸித்தஸ்ய - சாஸ்த்ரத்தில் சொல்லியவற்றிற்கு, லக்ஷணம் - அறிகுறியானது, த்ரிதா - ப்ரணவம், தத், ஸத் எனும் மூன்றுடன் சேர்ந்துள்ளது என்று, ஸப்ததச உதிதம் - பதினேழாம் அத்யாயத்திலே சொல்லப்பட்டது.
अत्र भाष्यम्- इदानीमशास्त्रविहितस्यासुरत्वेन अफलत्वं शास्त्रविहितस्य च गुणतस्वैविध्य शास्त्रसिद्धस्य लक्षणं चोच्यते इति । शास्त्रं यस्य विधायकत्वेन नास्ति तदशास्त्रमित्यभिप्रायेणाशास्त्रविहितस्येत्युक्तम् । ओं तत्सदिति (१७. २३) शास्त्रसिद्धस्य त्रिविधं लक्षणमुक्तम् ॥ २१ ॥
பதினேழாமத்யாயாரம்பத்திலே இதையடியொற்றிய பாஷ்யமிவ்வாறுள்ளது - தத்வம், உபாயமிவற்றை வேதத்தைக்கொண்டே அறியவேண்டுமென்று கீழே சொல்லியாயிற்று. இப்பொழுது பதினேழாமத்யாயத்திலே மூன்று விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவையாவன ''சாஸ்த்ர விதிக்கு முரண்பட்டது அஸுரர்களைச் சேர்ந்ததாகையாலே பயனற்றது; சாஸ்த்ரத்தில் சொல்லியது ஸாத்த்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகைப் பட்டது; சாஸ்த்ரத்தில் சொல்லியதற்கு லக்ஷணமும் சொல்லப்படுகிறது'' என்பவையாகும்.
அசாஸ்த்ரமாவது சாஸ்த்ரத்தினால் செய்யும்படி விதிக்கப்படாதது. இக்கருத்தைக்கொண்டே "சாஸ்த்ரத்தில் விதிக்கப்படாததற்கு'' என்றார் பாஷ்யத்திலே. சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டதற்கு மூன்று லக்ஷணமாவது - 'ப்ரணவம்', ''தத்,'' ''ஸத்' இம்மூன்றுமே என்று சொல்லப்பட்டது. (21)
மறை பொருந்தாதவை வல்லசுரர்க்கு வகுத்தமையும்
மறை பொருந்துந் நிலையின் வன்குணப்படி மூவகையும்
மறை நிலைதன்னைவகுக்கும் குறிமூன்றின் மேன்மையையும்
மறையுமிழ்ந்தானுரைத்தான் வாசவன்றன் சிறுவனுக்கே. 18
வேதத்தை ப்ரகாசம் செய்த கண்ணன் இந்திரனின் பிள்ளையான அர்ஜுனனுக்கு, வேதத்திற்குச் சேராத கர்மங்கள் வலிய அஸுர ப்ரகிருதிகளுக்காக ஏற்பட்டது என்பதையும், வேதத்திற்குப் பொருந்தும் கர்மாநுஷ்டாநத்தில் ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்னும் குணங்களுக்கேற்ப மூன்று பிரிவுகளையும், வேதத்தில் விதித்த கர்மங்களைப் பிரிக்க உதவும் மூன்று அடையாளங்களின் சிறப்பையும் (ப்ரணவம், தத், ஸத் என்ற மூன்றின் உயர்வு என்றவாறு) உரைத்தான்.