Śrīkoṣa
Chapter 1

Verse 1.3

मध्यमे भगवत्तत्त्वयाथात्म्यावाप्तिसिद्धये ।
ज्ञानकर्माभिनिर्वर्त्यो भक्तियोगः प्रकीर्तितः ॥३॥

Commentaries

Commentary by Maturāntakam Swāmī

மத்யமே - இரண்டாவது ஷட்கத்தில், பகவத்-தத்த்வ - பகவானாகிய ப்ராமாணிக வஸ்துவின், யாதாத்ம்ய - உண்மை நிலையை, அவாப்தி-ஸித்தயே - அநுபவிப்பதாகிய பலத்தைப் பெறுவதற்காக, ஜ்ஞாந-கர்ம-அபிநிர்வர்த்ய: - ஜ்ஞாநயோக கர்மயோகங்களால் ஏற்படக்கூடியதான, பக்தியோக: - பக்தி எனும் யோகமானது, ப்ரகீர்த்தித: - சிறந்ததாகச் சொல்லப்பட்டது.
முதல் ஷட்கார்த்தத்தைச் சொல்லிய பிறகு, மத்யம ஷட்கமானது மோக்ஷத்திற்கு ஸாக்ஷத்தான உபாயத்தைத் தெரிவிக்கிறதென்கிறார். முன் சுலோகத்தில் 'பூர்வஷட்கேந' என்று ஸமாஸத்திலுள்ள 'ஷட்க' என்கிற சொல்லை மாத்திரம் ஏழாவது வேற்றுமையுடையதாகக்கொண்டு இங்கும் சேர்த்து 'மத்யமே ஷட்கே' என்று கொள்ளவேண்டும்.
பகவான் என்கிற பதமானது மத்யம ஷட்கத்தில், ப்ரபஞ்சமனைத்திற்கும் ஒரே காரணமென்றும் தோஷங்கள் கலசாத மங்கள குணங்கள் பொருந்தியதென்றும் சொல்லப் பட்ட குணங்களையுடைய பரப்ரஹ்ம விஷயத்தில், அக்ஷரம் தோறும் பகுதி விகுதிகளைக்கொண்டும், இடுகுறிப் பெயராகக்
கொண்டும் பகவத் பராசரர் முதலியவர்களால் ஸமந்வயம் செய்யப்பெற்றிருப்பதை இங்குக் கவனிக்க வேணும். ஸ்ரீவிஷ்ணு புராணத்திலே பகவத் சப்தார்த்தத்தை இவ்வாறு ஸங்க்ர ஹித்துள்ளது - "பகவானிடத்தில் இந்தச் சப்தமானது யோகம், ரூடி இரண்டு சக்தியுமுடையது (காரண, இடுகுறிப் பெயர்). ஆகவே விஷ்ணுவினிடத்தில் பகவான் என்கிற சப்தமானது அமுக்யமன்று. மற்றவரிடமே அமுக்யம் என்று .
1. ப்ரஹ்ம சப்தமானது எம்பெருமானையே முக்யமாகச் சொல்லுமென்பதற்கு 'பகவத் சப்தம் போலே ' என்று ஸ்ரீ பாஷ்யாரம்பத்தில் உதாஹரித்துள்ளார்.
2. பகவத்பக்தி செய்பவர்களுக்குப் பாகவதர் என்று பெயர். இதனாலும் பகவானே பக்திக்கு விஷயமாயிருப்பவன் என்று தேறுகிறது.
பகவானாகிற தத்துவத்தைப் பகவத்தத்வம் என்கிறது. இங்குத் தத்வமாவது ப்ராமாணிகமான பொருள்.
"யாதாத்ம்யாவாப்திஸித்தயே'' என்பது "தத்வேந ப்ரவேஷ்டும்' என்று கீதையில் சொல்லப்போகிற பொருளைத் தெரிவிக்கின்றது.
இதனால் ஐச்வர்யம் முதலியவற்றைப் பக்திக்குப் பலமாகச் சொல்லுவதெல்லாம் ஆத்மாவானவன் பகவான் பக்கல் பரம புருஷார்த்தமொன்றையே விரும்பவேண்டும் என்பதற்காகவே. மற்றவை அல்பம், மோக்ஷமோ நிரதிசயஸுகம் என்று தெளிவதற்காகவே என்று ஸூசநம் செய்யப்பட்டது. இங்கு யாதாத்ம்யமாவது - தேசகால வரையரை யற்றதாய் எங்கும் நிறைந்ததுமான ஸ்வாபாவிகமான ஆகாரம். அவாப்தி: - அதை ஸர்வோத்க்ருஷ்டமான ஆநந்தமாக அநுபவிக்கை. அதுவாகிற ஸித்தி, அல்லது அவ்வநுபவமே எல்லையற்ற புருஷார்த்தமாகையால் அதை அடைவது ஸித்தி என்றும் கொள்ளலாம்,
ஜ்ஞாநகர்மாபிநிர்வர்த்ய: என்றதனால் முதலும் நடுவுமான ஷட்கங்களின் க்ரமத்திற்கு மூலமான ஸம்பந்த விசேஷம் ஸூசிதம். அதை அநுஸரித்தே ஏழாவது அத்யாயாரம்பத்திலே இவ்வாறு ஸ்ரீ கீதாபாஷ்யமுள்ளது :
“முதல் ஆறு அத்யாயங்களாகிற ஷட்கத்தினால் பரமப்ராப்யனும், தோஷமில்லாதவனும், உலகத்திற்கெல்லாம் ஒரே காரணமாயும், ஸர்வத்தையும் அறிந்தவனும், ஸர்வத்திற்கும் ஆத்மாவாயும், பழுதாகாத ஸங்கல்பமுடைய வனும், உபயவிபூதியையுடையவனும், பரப்ரஹ்மமுமான ஸ்ரீமந்நாராயணனை மோக்ஷத்தில் அநுபவிப்பதற்கு உபாய மான பகவத்பக்தி யோகத்தைச்சொல்வதற்காக அந்த பக்திக்கு உபகாரகமாய், ஆத்மாவின் யதாவஸ்த்தித ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞாநத்துடன் செய்யும் கர்மயோகா நுஷ்டாநத்தினாலுண்டாகுமதாய், பகவானை அநுபவிப்ப வனாக ஜீவனுடைய யதாவஸ்த்தித ஸ்வரூபத்தைப்பற்றியது மான ஸாக்ஷாத்காரமானது சொல்லப்பட்டது. இப்பொழுது இரண்டாவது ஷட்கத்தினால் பரப்ரஹ்மமாகிய பரமபுருஷ ஸ்வரூபமும், பக்தி சப்தத்திற்குப்பொருளான அந்தப் பரம புருஷோபாஸநமும் சொல்லப்படுகிறது.
இவ்வர்த்தமானது மேலே உலகத்திலுள்ளவற்றின் வியாபாரமனைத்தும் எவனாலே ஏற்படுகிறதோ என்று ஆரம்பித்து, என்னிடம் பரபக்தியை அடைகிறான் என்று சுருங்கச் சொல்லப்படப்போகிறது' என்பதே அந்த பாஷ்யப்பகுதி.
இதனால் கர்மஜ்ஞாநங்கள் மூலமே பக்தியுண்டாக வேண்டிய தாகையால் முதல் ஷட்கத்தில் அவற்றைச் சொல்லி, அவற்றால் வரும் பக்தியோகத்தை நடுவிலுள்ள ஷட்கத்தால் சொல்லியது என்று இரண்டிற்குமுள்ள ஸங்கதியானது (ஸம்பந்தம்) ஸூசிதம்.
பக்தியாகிற யோகம் பக்தியோகமென்பது. யோக சப்தமானது கோசத்தின்படி ஸந்நாஹம், உபாயம், த்யாநம், கூட்டம், கூட்டுதல் என்ற அர்த்தங்களுள், உபாயம் என்ற அர்த்தத்தை இங்குத் தெரிவிக்கிறது.
த்யாநம் என்பதாக யோகசப்தத்திற்கு மற்றொரு அர்த்தமுண்டு. அப்படியானாலும் பக்தியாகிற த்யாநம் என்று விசேஷித்தும், பொதுவாகவும் பரஸ்பரம் அபேதம் கொள்ள வேண்டும்.
ப்ரகீர்த்தித: -பக்திஸ்வரூபம், அதின் அங்கம், அதற்கு விஷயம், அதன் பலமிவையெல்லாம் நன்றாகச்சொல்லப் பட்டது என்று பொருள்.